கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கனடாவின் மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 17.75 டொலர்களாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது தற்போது உள்ள 17.40 டொலர்களாக செலுத்தும் குறைந்தபட்ச ஊதியத்தை விட 2.4% அதிகரிப்பு ஆகும்.

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, பகுதி நேரம், தற்காலிக வேலைகள் மற்றும் குறைந்த ஊதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு இது நன்மை பயக்கும் என அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஊதிய மாற்றங்களைப் பட்டியலில் சேர்த்து, பணியாளர்களுக்கு புதிய ஊதியத்தை வழங்க வேண்டும்.

அரசின் விதிமுறையின்படி, எந்த மாகாணத்திலும் அல்லது பிரதேசத்திலும் உள்ள குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசாங்கத்தின் ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், தொழிலதிபர்கள் அதிக தொகையை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap