முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை அவர் தலைமறைவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காணாமல் போயுள்ளதாகவும், அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த எந்தவொரு தகவலையும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உதவிய எந்தவொரு நபரும், தண்டனைச் சட்டத்தின் 209 வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

தேசபந்து தென்னகோன் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்பதன் காரணமாக எந்த சிறப்புச் சலுகையும் பெறமாட்டார். வேறு சந்தேக நபரைப் போலவே நடத்தப்படுவார்.” என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, குறிப்பிட்டார்.

Bootstrap