தண்ணீரால் ஏற்படும் அரியவகை ஒவ்வாமையால் அவதிப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த கெண்டல் என்ற 25 வயதுடைய பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரியவகை ஒவ்வாமையால் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாத்திரமே குளிக்கிறாராம் அதுமாத்திரமல்லாமல் சாதரணமாக தண்ணீரில் கை கழுவினாலும் வலி மற்றும் எரிச்சல் அதிகரிக்குமாம்.
குறித்தப் பெண்ணுக்கு இந்த ஒவ்வாமையானது 15 வயதில் இருந்து இருப்பதாகவும் இதற்கான சரியான மருந்து கண்டுப்பிடிக்காத காரணத்தால் வைத்தியர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.