சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வடகொரியா நடவடிக்கை.

வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

வடகொரியாவில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வும் வெளி உலகத்துக்கு தெரியாத வகையில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வடகொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

Bootstrap