பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்துடன்,10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது.
இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்த நிலையில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.