விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்க யுவதிகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதிகள் அமெரிக்காவை சேர்ந்வர்கள் என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் பெலிசேவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சென் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர்கள் மூன்று பேரும் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களின் உடலையும் மீட்டு அறையை சோதனை செய்தனர். அறையில் இருந்த வெற்று மதுபான போத்தல்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் அதீத போதை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Bootstrap