அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், புத்தாண்டு காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத்  தொடர்ச்சியாக விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதை உறுதி செய்வதில்  கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க  மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பிலும்  தீர்க்கமாக ஆராய்ந்துள்ளனர்.

நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

நெல் கொள்வனவுக்காக  ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ், கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதோச நிறுவனம்   அண்மையில் தெரிவித்திருந்தது.

Bootstrap