இந்தியாவிற்கு திருப்பி அனுப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாதிகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அமெரிக்க அரசு நேற்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது.

அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோத குடியேறிகள் பட்டியல்

கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.

முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினரை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த 205 பேரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் காவல் துறை வட்டாரங்கள் கருத்டது தெரிவித்த போது மத்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அதிகாரிகளுடன் அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

Bootstrap