ஸ்வீடன் பாடசாலையில் பாரிய துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு

ஸ்வீடனில் பாடசாலையொன்றில் நேற்று (4) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேல்நிலை பாடசாலையில் சம்பவம்

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ஒரிபுரொ நகரில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்ற மேல்நிலை பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்  தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Bootstrap