கனடாவில் கொலையுடன் தொடர்புபட்ட இருவர் கைது

கனடாவில் படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கனடாவின் டொரன்டோ பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரொறன்ரோவில் இந்த ஆண்டில் பதிவான முதல் படுகொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மெடிசன் மற்றும் ப்ளூர் வீதிகளை அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 27 வயதான டராபாகோடி சாவான் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

படுகாயம் அடைந்த நிலையில் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஒஷாவோ பகுதியைச் சேர்ந்த 24 வயதான ப்ரூக்லைன் வாஸ் மற்றும் 21 வயதான கமரூன் பிரவுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவருக்கு எதிராகவும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bootstrap