நேற்று மாலை தென் கொரியாவின் பூசன் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர்பஸ் விமானம் தீப்பிடித்ததால், அதில் இருந்த 176 பேரும் வெளியேற்றப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஹாங்காங் நோக்கி செல்வதற்கு தயாரான விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். விமானத்தில் 169 பயணிகள், 7 விமான ஊழியர்கள் இருந்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 3 பேர் மட்டும் காயமுற்ற நிலையில் ஏனைய அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.